செய்திகள்
பாட புத்தகங்கள்

குறைக்கப்பட்ட பாடங்கள் எவை?- அறிவிப்பு எப்போது?

Published On 2021-01-13 02:23 GMT   |   Update On 2021-01-13 02:23 GMT
பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், குறைக்கப்பட்ட பாடங்கள் எவை? என்பதற்கான தகவல்களையும் உடனே வெளியிட பெற்றோரும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருகிற 19-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்க இருக்கும் நிலையில் நடப்பு கல்வியாண்டில் ஆன்லைன் மூலமாக முழுப்பாடங்களையும் நடத்தி முடிக்க முடியாத காரணத்தினால், பாடங்கள் எதுவும் குறைக்கப்படுமா? என்று கேள்வி எழுந்தது. அதன்படி கல்வித்துறையும்,‘9-ம் வகுப்பு வரையில் உள்ள வகுப்புகளுக்கு 50 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்ற மாநில மாணவர்களுடன் போட்டிப்போட வேண்டும் என்ற அடிப்படையில் 35 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும் என்றும் அறிவித்தது.

அவ்வாறு குறைக்கப்பட்ட பாடங்கள் எவை-எவை? என்பது குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்? என்பது தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், குறைக்கப்பட்ட பாடங்கள் எவை? என்பதற்கான தகவல்களையும் உடனே வெளியிட பெற்றோரும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் வழக்கமாக நடைபெறும். இந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகே, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News