செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு நிலமும் கொடுத்துவிட்டோம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2020-12-18 11:05 GMT   |   Update On 2020-12-18 13:38 GMT
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது:-

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இன்னும் அதை எடுத்துக்கொள்ளவில்லை. மத்திய அரசின் அதிகாரிகள் இன்னும் கையெழுத்திட்டு நிலத்தை பெற்றுக்கொள்ளவில்லை.

குறிப்பிட்ட நிறுவனங்களிடம் தான் ஜிபிஎஸ் வாங்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்யவில்லை. மின்துறையை தனியார்மயமாக்கும் எந்த எண்ணமும் அரசிடம் இல்லை. கேஸ் விலையை குறைக்க மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாட்கள் குறைவாக உள்ள காரணத்தினால் நாளை முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். எடப்பாடி தொகுதியில் இருந்து நாளை முதல் பிரசாரத்தை தொடங்குகிறேன்.

அதிமுகவை பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் தான் பாஜக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News