செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாத 51 பேருக்கு அபராதம்

Published On 2020-12-04 08:17 GMT   |   Update On 2020-12-04 08:17 GMT
வெள்ளகோவிலில் முககவசம் அணியாத 51 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வெள்ளகோவில்:

கொரோனா தொற்று பரவலைத்தடுக்க மத்திய,மாநில அரசு சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினர் மூலம் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதை கண்காணிக்க துறை வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளகோவில் பகுதியில் முக கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத 51 பேர் மீது நடவடிக்கை மேற்கொண்டு ரூ.10ஆயிரத்து 800 அபராதம் விதித்துள்ளனர்.

தற்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து கொரோனா தொற்று பரவலை தடுக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமாய் வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200-ம், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News