செய்திகள்
தற்கொலை

ஓமலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-11-29 14:26 GMT   |   Update On 2020-11-29 14:26 GMT
ஓமலூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருப்பூர்:

ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி ராமானூர் காலனியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி வள்ளி (வயது 40). இவர்களுடைய மகள் திவ்யபாரதி (22). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஓமலூர் அடுத்த செட்டியப்பனூர் காலனி பகுதியை சேர்ந்த சடையன் மகன் ஜெகதீஷ் (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது கணவர் வீட்டில் திவ்யபாரதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓமலூர் போலீஸ் நிலையத்தில் அவரின் தாயார் வள்ளி புகார் அளித்தார்.

அதில், ‘எனது மகளின் சாவிற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என்னிடம் ரூ.50 ஆயிரம், 2 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை வாங்கி வருமாறு, எனது மகளிடம் வரதட்சணை கேட்டு ஜெகதீஷ் தொடர்ந்து கொடுமைப்படுத்தி உள்ளார்’ என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, மேட்டூர் உதவி கலெக்டர் சரவணன், ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சோமசுந்தரம் ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News