கரூர் பகுதியில் வெவ்வேறு சம்பவத்தில் வீட்டில் இருந்த 7½ பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் பகுதியில் வெவ்வேறு சம்பவத்தில் வீட்டில் இருந்த 7½ பவுன் நகை திருட்டு
பதிவு: நவம்பர் 27, 2020 10:15
நகை திருட்டு
கரூர்:
கரூர் கருப்பாயி கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). இவர் வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு இருசக்கர
வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் அதிகாரிகள் என கூறி வீட்டையும், கடையையும் சோதனை செய்துள்ளனர். பின்னர் அவர்கள் சென்றவுடன் வீட்டில் இருந்த பீரோவை
பார்க்கும்போது 5 பவுன் நகைகள் திருடு போய்இருந்தது. இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள்
குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் வெங்கமேடு கொங்குநகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன்(46). இவர், சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அலமாரியில் வைத்திருந்த 2½ பவுன்
நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.