செய்திகள்
பாஜக மாநில தலைவர் எல் முருகன்

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு- முருகன் ஆலோசனை

Published On 2020-11-05 07:40 GMT   |   Update On 2020-11-05 07:40 GMT
வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது குறித்து பாஜக தலைவர் எல்.முருகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை:

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். நவம்பர் 6-ந்தேதி திருத்தணியில் தொடங்கும் வேல் யாத்திரை, டிசம்பர் 6-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது.

வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார், பாலமுருகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த பொதுநல வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.

நாளை தொடங்க உள்ள பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு தகவல் தெரிவித்தது. மேலும் கொரோனாவுக்கான 2, 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கேட்டு, செந்தில்குமார், பாலமுருகன் தொடர்ந்த 2 பொதுநல வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முடித்து வைத்தது.

இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் வேல் யாத்திரைக்கு  தமிழக அரசு அனுமதி மறுத்தது குறித்து பாஜக தலைவர் எல்.முருகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News