செய்திகள்
கோப்புபடம்

கரூரில் அதிமுக திமுகவினர் இடையே மோதல் - தொண்டர் பலி

Published On 2020-11-01 13:45 GMT   |   Update On 2020-11-01 13:45 GMT
கரூரில் விளம்பர பேனரை கழற்றியது தொடர்பாக அதிமுக திமுக இடையே நடந்த மோதலில் தொண்டர் ஒருவர் பலியானார்.
கரூர்:

கரூர் மாவடியான் கோவில் தெருவில் நேற்று முன்தினம் விநாயகர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் தனித்தனியாக விளம்பர பலகை வைத்துள்ளனர். இந்நிலையில் கும்பாபிஷேகம் முடிவுற்ற நிலையில், நேற்று மாலை அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் தி.மு.க.வின் விளம்பர பேனரை கழற்றியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி சேர்ந்த தி.மு.க. தொண்டர் பிரபாகரன் (வயது 55) மற்றும் தி.மு.க.வை சேர்ந்த சிலர் பேனரை கழற்றியது குறித்து அ.தி.மு.க.வினரிடம் கேட்டுள்ளார். அப்போது பிரபாகரனுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டாகி மோதல் ஏற்பட்டது. இதில், பிரபாகரன் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பிரபாகரன் தனது மகன் விக்னேஷிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் அ.தி.மு.க.வினரிடம் சென்று தனது தந்தை தாக்கப்பட்டது குறித்து கேட்டுள்ளார். அப்போது அவரையும் அ.தி.மு.க.வினர் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த விக்னேஷ் கரூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், வீட்டில் இருந்தவர்களிடம் பிரபாகரன் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பிரபாகரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News