செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2020-10-30 12:48 GMT   |   Update On 2020-10-30 12:48 GMT
முத்தூரில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
முத்தூர்:

முத்தூர் சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் மற்றும் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் புறக்காவல் நிலைய வளாகம் பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜலட்சுமி, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள்.பிரசாத்தாமரைக்கண்ணன், மார்கினி, வினோதினி, சுகாதார ஆய்வாளர் வேல்முருகன், பேரூராட்சி செயல் அலுவலர் கே.பத்மலதா ஆகியோர் கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் முககவசம் அணியாமல் வந்த ஒரு சில வாகன ஓட்டிகள் 7 பேருக்கு தலா ரூ.200 வீதம் என மொத்தம் ரூ.1,400 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் முககவசம் அணிவதன் நன்மைகள், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உட்பட பல்வேறு கொரோனா பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிப்பது பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News