செய்திகள்
நகை கொள்ளை

ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு

Published On 2020-10-12 10:12 GMT   |   Update On 2020-10-12 10:12 GMT
ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமம் 1-வது வார்டை சேர்ந்தவர் திருக்குமரன். இவரது மனைவி அலங்காரம் (வயது 70). சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுடைய 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மேலும் கணவர் இறந்து விட்டதால் அலங்காரம் மட்டும் தனியாக வசித்து வருகிறார். கடந்த 8-ந்தேதி அலங்காரம் பெரம்பலூரில் வசிக்கும் தனது 2-வது மகள் கவிதா வீட்டில் நடந்த சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார்.

இந்நிலையில் நேற்று காலை பெரம்பலூரில் வசிக்கும் அலங்காரத்தின் மூத்த மகள் சத்தியசெல்வி, துணிமணிகள் சிலவற்றை எடுக்க அலங்காரத்தின் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு சத்தியசெல்வி அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த அரை பவுன் நகை, ரூ.3 ஆயிரம் மற்றும் வீட்டில் பயன்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர், அரிசி மூட்டை உள்ளிட்ட பொருட் களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து சத்தியசெல்வி பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பான புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News