செய்திகள்
அபராதம்

கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களுக்கு அபராதம்

Published On 2020-10-09 11:53 GMT   |   Update On 2020-10-09 11:53 GMT
காங்கேயம் பகுதியில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
காங்கேயம்:

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்டம் வாரியாக அந்தந்த பகுதிகளுக்கு கொரோனா விதிமுறை கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பறக்கும் படையில், காங்கேயம் நகராட்சிக்கு, காங்கேயம் தனி தாசில்தார் ஜெபசிங், நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளர் வருண், காங்கேயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் நகரப்பகுதியில் கொரோனாவை தடுக்க அரசு கடைபிடிக்க வேண்டிய வழிமுறையை கடைபிடிக்காத 77 நிறுவனங்கள் மற்றும் வாகனங்களுக்கு மற்றும் முககவசம் அணியாமல் சென்ற 134 பேருக்கு என மொத்தம் ரூ.65,300 அபராதம் விதிக்கப்பட்டது, தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News