செய்திகள்
மதுசூதனன்

அதிமுக அவைத்தலைவர் மாற்றமா?- மதுசூதனன் விளக்கம்

Published On 2020-10-06 08:06 GMT   |   Update On 2020-10-06 08:06 GMT
அதிமுக அவைத்தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க.வை பொறுத்தவரை முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில் 7-ந்தேதி (நாளை) முதல்- அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக செயற்குழு கூட்டத்திற்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அறிவித்திருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே அதிமுக அவைத்தலைவராக உள்ள மதுசூதனுக்கு உடல்நிலை குறைவு காரணமாக அவைத்தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகின.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மதுசூதனன், அவைத்தலைவராக நான்தான் நீடிப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. அவைத்தலைவர் பதவி ஜெயலலிதா கொடுத்தது. நான் இருக்கும் வரை அவைத்தலைவராகத்தான் இருப்பேன்.

ஓபிஎஸ் எந்த நோக்கத்திற்காக தர்மயுத்தம் செய்தாரோ அதை நிறைவேற்றுவார். பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்து இன்னும்முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News