செய்திகள்
கேஎஸ் அழகிரி

பட்டியலினப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம்- காங்கிரஸ் கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு

Published On 2020-10-04 07:35 GMT   |   Update On 2020-10-04 07:35 GMT
உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பட்டியலினப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினருக்கு, கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ராசுக்கு வர பா.ஜ.க. அரசு விதித்த பல தடைகளை தகர்த்து ராகுலும், பிரியங்காவும் பயணம் செய்த காட்சிகள், 1977 ஆம் ஆண்டில் ஜனதா ஆட்சியில் பீகார் மாநிலம் பெல்ச்சியில் 11 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டபோது அவர்களுக்கு ஆறுதல் கூற பல தடைகளை கடந்து  இந்திரா காந்தி யானை மீது அமர்ந்து பயணம் செய்ததை நினைவுபடுத்துவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் பாரம்பரியத்தில் வந்தவர்கள் என்பதை ராகுலும், பிரியங்காவும் மீண்டும்  நிரூபித்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அப்பாவி பெண்ணிற்கு நீதி கேட்கும் போராட்டம் வெற்றிபெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள, காங்கிரஸ் கட்சியினருக்கு கே. எஸ். அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். 
Tags:    

Similar News