செய்திகள்
கோப்புபடம்

தஞ்சையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-01 14:45 GMT   |   Update On 2020-10-01 14:45 GMT
தஞ்சை ரெயிலடியில் தலைமை தபால் நிலையம் முன்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை ரெயிலடியில் தலைமை தபால் நிலையம் முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராசன் தலைமை தாங்கினார். விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, மக்கள் அதிகாரம் நிர்வாகி தேவா, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் நாத்திகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 

ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ள அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வணிக ஊக்குவிப்பு சட்டம், ஒப்பந்த சாகுபடி சட்டம் ஆகிய 3 சட்ட மசோதாக்களை எதிர்ப்பதுடன் இவைகளை திரும்ப பெற வேண்டும். இந்த சட்டங்களுக்கு துணை போகும் மாநிலஅரசு, விவசாயிகளுக்கு துரோகம் செய்யக்கூடாது. 

திருச்சியில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன், சித்திரக்குடி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆண்டவர், சந்திரசேகர், செல்லத்துரை, சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News