செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

கட்சி கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக்கூடாது- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2020-10-01 05:50 GMT   |   Update On 2020-10-01 09:37 GMT
கட்சியின் விதிகள் அனைவருக்கும் தெரியும். கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை:

சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார், சிவாஜி கணேசனின் ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ போன்ற பாடல்களை பாடினார். சிவாஜி கணேசன் ஒரு வரலாறு; பல கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியவர் என்று அவரை நினைவுகூர்ந்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:

* திண்டுக்கல் சீனிவாசனுக்கு கட்சியின் விதிகள் தெரியும். அதன்படி தகுந்த முறையில் பேச வேண்டும்.

* துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாற்றுக் கட்சியினரை அழைத்து பேசவில்லை. தன் சொந்த கட்சியினருடன்தான் பேசினார்.

* ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக ஆலோசனை நடத்துவதில் தவறில்லை.

* செயற்குழுவில் கருத்து வேறுபாடு வரலாம்; ஆனால் வெளியில் கருத்து கூறுவது தவறு.

* அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு அக்.7ந்தேதி வரும்.

* ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே; வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே

* சண்டை நடந்தால்தானே சமாதானம் செய்வதற்கு?  கட்சியில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News