செய்திகள்
பிரதமர் மோடி, ரஜினிகாந்த்

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

Published On 2020-09-17 10:26 GMT   |   Update On 2020-09-17 10:26 GMT
பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, இந்தக் கடினமான காலங்களில் உங்களுக்குள் உள்ள கடினமான மனிதர் அதிக வலிமையைப் பெற வாழ்த்துகிறேன். பிறந்தநாள் வாழ்த்தக்கள்” என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News