செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக தலைமையில்தான் கூட்டணி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2020-08-28 13:20 GMT   |   Update On 2020-08-28 13:20 GMT
எம்.ஜி.ஆர்,, ஜெயலலிதா காலம் முதலே அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரும், அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தஞ்சாவூரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது கூட்டணி தலைமை குறித்து கூறுகையில் ‘‘எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலம் முதலே அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்பட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும் அதிமுக-தான் தலைமை வகித்தது. வரும் சட்டசபை தேர்தலிலும் அதே நிலை தொடரும். எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக-தான் தலைமை வகிக்கும். கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கும்போது முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

* தஞ்சையில் 2227 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 1 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை

* தஞ்சையில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

* கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு, குழந்தைகள் நல மையம் கட்டப்படுகிறது

* கொரோனா பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது

* தஞ்சையில் கோவிட் கேர் மையங்களில் 650 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன

* சுகாதாரம், உள்ளாட்சி துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது

*  கொரோனா சிகிச்சைக்கு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

* காவிரி-கோதாவரியை இணைக்க பலமுறை வலியுறுத்தியுள்ளோம்

* தமிழகத்துக்கு வரவேண்டிய காவிரி நீரைப் பெற உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Tags:    

Similar News