செய்திகள்
குண்டு மல்லி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு

Published On 2020-08-22 09:47 GMT   |   Update On 2020-08-22 09:47 GMT
கரூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நொய்யல்:

கரூர் மாவட்டம், நடையனூர், முத்தனூர், கவுண்டன்பதூர், சேமங்கி, மரவாபாளையம். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி, முல்லைப்பூ, சென்டுமல்லி, அரளி, செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா போன்ற வகைகளையும், மருவு, துளசி, கோழிக்கொண்டைப்பூ போன்ற தழை வகைகளையும் சாகுபடி செய்துள்ளனர்.

இந்த பகுதியில் விளையும் பூக்களை வாங்குவதற்கு வேலாயுதம்பாளையம், கொடுமுடி, பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், பரமத்தி, தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். கடந்த வாரத்தை விட இந்த வாரம் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் குண்டு மல்லி பூ கிலோ ரூ.400-க்கும், முல்லைப் பூ ஒரு கிலோ ரூ.400-க்கும், அரளி ஒரு கிலோ ரூ.100-க்கும், சம்மங்கி ரூ.200-க்கும், மஞ்சள் செவ்வந்தி பூ ரூ.150-க்கும், ரோஜா ஒரு கிலோ ரூ.100-க்கும் மேலும் கோழிக்கொண்டை ஒருக்கட்டு பூ ரூ.5-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.5-க்கும், ஆடாதுடை ஒருக் கட்டு ரூ.5-க்கும், வாங்கிச் சென்றனர்.

இந்த வாரம் குண்டுமல்லி பூ ஒரு கிலோ ரூ.750-க்கும், முல்லை பூ ரூ.700-க்கும், அரளி ரூ.250-க்கும், சம்மங்கி ரூ.350-க்கும், மஞ்சள் செவ்வந்தி பூ ரூ.250-க்கும், ரோஜா ஒருகிலோ ரூ.200-க்கும், கோழிக்கொண்டை ரூ.10-க்கும், ஆடாதுடை ஒருக்கட்டு ரூ.10-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.10க்கும் வாங்கிச்சென்றனர். இன்று (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதாலும், பூ வரத்து குறைந்துள்ளதாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News