செய்திகள்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னையில் கொரோனா சந்தேக வார்டு பிரிவு தொடக்கம் - ஆணையர் பிரகாஷ்

Published On 2020-07-28 13:21 GMT   |   Update On 2020-07-28 13:21 GMT
சென்னையில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சந்தேக வார்டு பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் கொரோனா பாதிப்படைவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றன. கொரோனா பரிசோதனை அதிகமாக செய்யப்படுவதால் தான் தற்போது சென்னையில் பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனா விழுப்புணர்வு வாகனங்களை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.   நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அவர் கூறியதாவது, சென்னையில் தற்போது கொரோனா வைரஸ் பரிசோதனை திருப்பு முனையாக அமைந்துள்ளதாகவும், தற்போது நாள் ஒன்றுக்கு  12,000 பரிசோதனை செய்யப்படுவதாகவும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சந்தேக வார்டு பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனைக்கு முன் கொரோனா அறிகுறி இருந்தால் கொரோனா சந்தேக வார்டில் அவர்கள் தனிமைப்படுத்திய பின், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.

இ-பாஸ் பெற விரும்புவோர் அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பித்தால் நிச்சயம் இ-பாஸ் வழங்கப்படும் என ஆணையர் தெரிவித்தார். 
Tags:    

Similar News