செய்திகள்
விபத்து

திருவள்ளூரில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்து

Published On 2020-07-25 07:26 GMT   |   Update On 2020-07-25 07:26 GMT
திருவள்ளூரில் காலி சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டீசல் டேங்க் சேதமானதில் சாலையில் டீசல் ஆறாக ஓடியது.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் எரிவாயு நிரப்பும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து எரிவாயு நிரப்புவதற்காக வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியிலிருந்து காலி சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருவள்ளூர் வழியாக வந்து கொண்டிருந்தது.

அந்த லாரியை பாலாஜி என்பவர் ஓட்டி வந்தார். நேற்று காலை திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான ஜெ.என்.சாலையில் லாரி வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி ஒன்று முந்தி செல்ல முயன்றுள்ளது.

இதனால் காலி சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி நிலைத்தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரின் மீது மோதியது. இந்த விபத்தில் லாரியில் டீசல் டேங்க் சேதமடைந்து சாலையில் டீசல் சிந்தி ஆறாக ஓடியது. காலி சிலிண்டர்களை ஏற்றி வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மாற்று லாரி வரவழைக்கப்பட்டு காலி சிலிண்டர்களை ஏற்றி கும்மிடிப்பூண்டிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News