செய்திகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கூட்டுறவு கடன் இல்லை என்றால் சாமானியர்களின் வாழ்வு நிர்கதியாகும் - மு.க.ஸ்டாலின்

Published On 2020-07-14 15:01 GMT   |   Update On 2020-07-14 15:01 GMT
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் வழங்கக் கூடாது என்ற உத்தரவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடன் வழங்குவதை நிறுத்துமாறு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என்ற  உத்தரவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது அறிக்கையில்,   கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.  இனி கூட்டுறவு வங்கிகளும் சங்கங்களும் நகைக்கடன் வழங்கக் கூடாது என அறிவித்து நகைக்கடனை ரத்து செய்கிறது அதிமுக அரசு.  இந்த அறிவிப்பின் மூலம் கூட்டுறவின் நோக்கமும் சிதையும், சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும்.

என அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன் உதவிகள் வழங்குவது நிறுத்தப்பட்டதால் நடுத்தர, ஏழை மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News