செய்திகள்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள்

ஊரடங்கு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை- கலெக்டர் தகவல்

Published On 2020-07-05 08:11 GMT   |   Update On 2020-07-05 08:11 GMT
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்திட பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 12, 19 மற்றும் 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்த நாட்களில் பொதுமக்களின் அனைத்து போக்குவரத்திற்கும் தடை செய்யப்படுகிறது. அனைத்து விதமான வணிக வியாபார கடைகள், தெருவோர கடைகள், இறைச்சி கடைகள் மூட வேண்டும். பொதுமக்கள் வெளியில் நடமாடுவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. அத்தியாவசிய தேவையான மருத்துவ சிகிச்சை, பால் மற்றும் மருந்தகங்களுக்கு தடை இல்லை.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஊரடங்கு உத்தரவு நாட்களில் நடைபெறும் திருமண நிகழ்வுகள் மற்றும் இறப்பு இறுதி சடங்குகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற விதி முறையோடு 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். இந்த விதிமுறையை பின்பற்றாமல் மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News