செய்திகள்
குழந்தை

கொரோனா அறிகுறியுடன் இருந்த கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு தொற்று இல்லை

Published On 2020-07-04 11:16 GMT   |   Update On 2020-07-04 11:16 GMT
கொரோனா அறிகுறியுடன் இருந்த கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு தொற்று இல்லை என்று திருவாரூர் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த ஆண், பெண்களுக்கு என தனித்தனியே வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கொரோனா தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 19 கர்ப்பிணிகளும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 7 பேருக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. இவர்களில் 5 பேருக்கு அறுவை சிகிச்சையும், 2 பேருக்கு சுகப்பிரசவமும் நடந்துள்ளது. இந்த 7 குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததுடன், கொரோனா வைரஸ் தொற்று ஏதுமில்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதனையடுத்து 3 தாய்மார்கள், தங்களது குழந்தையுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த தகவலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மகப்பேறு தலைமை டாக்டர் பிரபா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News