செய்திகள்
அல்லிநகரம் போலீஸ் நிலையம்

7 போலீசாருக்கு கொரோனா- அல்லிநகரம் போலீஸ் நிலையம் மூடல்

Published On 2020-07-02 10:52 GMT   |   Update On 2020-07-02 10:52 GMT
தேனி அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் 7 போலீசார் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதையடுத்து போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
தேனி:

தேனி அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தனிப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் கடந்த வாரம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று முன்தினம் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 4 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று பெண் போலீஸ் ஒருவரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானார். மொத்தம் 7 போலீசார் பாதிக்கப்பட்ட நிலையில், அல்லிநகரம் போலீஸ் நிலையம் நேற்று மூடப்பட்டது. போலீஸ் நிலையம் முன்பு இரும்பு தடுப்புகள் வைத்து போலீசார் அடைத்துள்ளனர். இந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதனால், அத்தியாவசிய அலுவல் பணிக்காக மட்டும் 3 போலீசார் போலீஸ் நிலையத்துக்கு வெளியே வளாகத்தில் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே தேனி மாவட்டத்தில் சின்னமனூர், கம்பம் தெற்கு, போடி நகர் ஆகிய போலீஸ் நிலையங்கள் கொரோனா பாதிப்பு எதிரொலியாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News