செய்திகள்
தற்காலிக காய்கறி கடைகள்

தேனி காமராஜர் பூங்காவில் தற்காலிக காய்கறி கடைகள்

Published On 2020-06-27 09:25 GMT   |   Update On 2020-06-27 09:25 GMT
தேனி காமராஜர் பூங்காவில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே காய்கறிகள் வழங்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனி:

தேனியில் உழவர் சந்தை, தினசரி சந்தை ஆகியவை கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டு உள்ளன. உழவர் சந்தை தற்காலிகமாக சுக்குவாடன்பட்டியில், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் உழவர் சந்தைக்கு வெளியே கடைகள் அமைத்து இருந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டனர். இதையடுத்து சில நாட்களாக அவர்கள் தாலுகா அலுவலகம் அருகில் கடைகள் அமைத்து இருந்தனர்.

இந்தநிலையில் கொரோனா கட்டுக்குள் வரும் வரையில் தேனி சமதர்மபுரத்தில் உள்ள காமராஜர் பூங்காவில் தற்காலிகமாக காய்கறி கடைகள் அமைத்து கொள்ள நகராட்சி நிர்வாகம் இந்த வியாபாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நேற்று முதல் அங்கு தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டன. காலை 6 மணி முதல் 11 மணி வரை இந்த காய்கறி கடைகள் செயல்படுகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே காய்கறிகள் வழங்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு நகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News