செய்திகள்
கைது செய்யப்பட்ட போலி டாக்டர்கள்

திமிரி அருகே 3 போலி டாக்டர்கள் கைது- 4 சிகிச்சை மையங்களுக்கு ‘சீல்’

Published On 2020-06-12 07:25 GMT   |   Update On 2020-06-12 07:25 GMT
திமிரி அருகே 3 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அனுமதி பெறாமல் நடத்தி வந்த 4 சிகிச்சை மையங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த காவனூர் பகுதியில் டாக்டர் படிப்பு படிக்காமல் சிலர் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு மாவட்ட அதிகாரி டாக்டர் கீர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைத்து காவனூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது காந்தி (வயது 65), பார்த்திபன் (52), ரங்கநாதன் (47) ஆகிய 3 பேரும் டாக்டர் படிப்பு படிக்காமல் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் திமிரி போலீசார் கைது செய்தனர்.

அத்துடன் அனுமதியின்றி அவர்கள் நடத்தி வந்த 3 சிகிச்சை மையங்கள் மற்றும் லட்சுமி நாராயணன் என்பவர் நடத்தி வந்த கிளினிக் ஆகிய 4 சிகிச்சை மையங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

Similar News