செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் வேகமாக பரவும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 4,405 பேருக்கு பாதிப்பு

Published On 2020-06-11 05:52 GMT   |   Update On 2020-06-11 05:52 GMT
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 19,333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது.
 
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. 12,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 260-ஆக உள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 4,405 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோடம்பாக்கத்தில் 2,805 பேருக்கும், திரு.வி.க.நகரில் 2,456 பேருக்கும், அண்ணாநகரில் 2,362 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 3,405 பேரும், தேனாம்பேட்டையில் 3,069 பேரும், திருவொற்றியூரில் 972 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 1,170 பேருக்கும், பெருங்குடியில் 481 பேருக்கும், அடையாறில் 1,481 பேருக்கும், அம்பத்தூரில் 901 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 521 பேருக்கும், மாதவரத்தில் 724 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 469 பேருக்கும், மணலியில் 383 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 
Tags:    

Similar News