செய்திகள்
வழக்குகள் பதிவு

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக இதுவரை 23 ஆயிரம் வழக்குகள் பதிவு

Published On 2020-05-30 15:58 GMT   |   Update On 2020-05-30 15:58 GMT
தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக இதுவரை 23 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து தேவையில்லாமல் வெளியே சுற்றுதல், முகக்கவசம் அணியாமல் செல்லுதல், மோட்டார் சைக்கிளில் 2 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு ஊரடங்கு செயல்களை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த சோதனையில் விதிமுறைகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் 250 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதுவரை மாவட்டத்தில் மொத்தம் சுமார் 23 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News