செய்திகள்
குழித்துறை அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை காணலாம்

கேரளாவில் இருந்து வந்த டீக்கடை ஊழியருக்கு கொரோனா

Published On 2020-05-26 16:30 GMT   |   Update On 2020-05-26 16:30 GMT
குழித்துறை அருகே கேரளாவில் இருந்து வந்த டீக்கடை ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எல்லையில் நடந்த பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
களியக்காவிளை:

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 65 வயது முதியவர் அங்குள்ள டீக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டம் குழித்துறை அருகே எருத்தாவூரில் உள்ள தன்னுடைய சகோதரர் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் மீண்டும் கேரள மாநிலத்துக்கு புறப்பட்ட போது எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது, அவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது தெரிய வந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டீக்கடை ஊழியரின் சகோதரர் மற்றும் சகோதரர் மனைவி, மகனுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக் காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், விளவங்கோடு தாசில்தார் ராஜ மனோகரன் மற்றும் களியக்காவிளை செயல் அலுவலர் ஏசுபாலன் அந்த பகுதியில் உள்ள சாலைகளை அடைத்து தூய்மை பணியை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News