செய்திகள்
மெட்ரோ ரெயில்

ஊரடங்கு தளர்த்தப்படுமா?- மெட்ரோ ரெயிலை ஜூன் 1-ந் தேதி முதல் இயக்க ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2020-05-26 11:51 GMT   |   Update On 2020-05-26 12:10 GMT
ஏசி பெட்டிகளுடன் மெட்ரோ ரெயில்கள் சேவை தொடங்க அரசின் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று மெட்ரோ ரெயில் அதிகாரி கூறியுள்ளார்.

சென்னை:

கொரோனா ஊரடங்கால் மார்ச் 21-ல் இருந்து சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மீண்டும் ஜூன் மாதம் முதல் மெட்ரோ ரெயில் சேவையைத் தொடங்க நிர்வாகம் தயாராக உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்து வருகிறது. ரெயில் நிலையங்களில் பயணிகள் சமூச இடைவெளி பின்பற்ற குறியீடு செய்யப்பட்டுள்ளது.

நிலையத்திலுள்ள 4 நுழைவு வாயிலில் ஒரு நுழைவு வாயில் மட்டும் பயன்படுத்தவும், தெர்மல் ஸ்கேன் சோதனைக்குப் பிறகு பயணிகளை ரெயிலில் அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூன் 1-ந் தேதி முதல் ரெயிலை இயக்க நிர்வாகம் தயாராக உள்ளது. இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் கொரோனா அதிகரித்தாலும் ஜூன் 1-ந் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படவோ, தளர்த்தப்படவோ வாய்ப்பு உள்ளது என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பிற மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ராஜ்தானி ரெயில்கள், விமானங்கள் இயக்க அரசு அனுமதித்து உள்ளதால், ஏ.சி. பெட்டிகளுடன் மெட்ரோ ரெயில்கள் சேவை தொடங்க அரசின் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அனுமதி கிடைத்தால் ஜூன் மாதத்தில் இருந்து போதிய பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் ரெயில்களை இயக்க தயார் நிலையில் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News