செய்திகள்
செலவினங்களை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை

20 சதவீத செலவினங்களை குறைக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியீடு

Published On 2020-05-21 12:08 GMT   |   Update On 2020-05-22 02:01 GMT
கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு செலவினங்களை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஒவ்வொரு மாநிலங்களும் மிகப்பெரிய அளவில் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகின்றன. சில மாநிலங்கள் நிதி நெருக்கடியால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்துள்ளது. ஆனால் தமிழக அரசு அதுபோன்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் செலவினங்களை குறைக்கும் வகையில் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. இதுகுறித்து அரசாணையும் வெளியிட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

* அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது

* மொத்த செலவில் 20 சதவீதத்தை குறைக்க தமிழக அரசு முடிவு

* அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்கலை தவிர்க்க வேண்டும்"

* நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி

* மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை

* சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி 

* மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரெயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி.

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News