செய்திகள்
ரெயில்

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,464 வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

Published On 2020-05-20 08:24 GMT   |   Update On 2020-05-20 08:24 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை செய்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் 1464 பேர் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருவள்ளூர்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளிமாநில தொழிலாளர்கள் 1,464 பேரை அவர்களுடைய சொந்த ஊருக்கு வழியனுப்பி வைத்தார்.

அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம், உதவி இயக்குனர் (நில அளவை) ராமச்சந்திரன், திருவள்ளூர் ஆர்.டி.ஓ. வித்யா, தாசில்தார்கள் சீனிவாசன், மணிகண்டன், விஜயகுமாரி வருவாய் துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ரெயில்வே துறை அலுவலர்கள் இருந்தனர்.
Tags:    

Similar News