செய்திகள்
அரிசி

பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள்

Published On 2020-05-16 13:48 GMT   |   Update On 2020-05-16 13:48 GMT
பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் சேர்ந்து ரூ.2 லட்சம் மதிப்பில் ஏழை மாணவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அப்பள்ளியில் நடைபெற்றது.
ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள வேங்கிக்குளத்தில் அரசு உதவிபெறும் தூய வளனார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் குடும்பத்தினர் ஊரடங்கால் தவித்து வந்தனர். இந்நிலையில், பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் சேர்ந்து ரூ.2 லட்சம் மதிப்பில் ஏழை மாணவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அப்பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அருட்தந்தை செபஸ்தியான், தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ ஆகியோர் தலைமை தாங்கினர்.

அறந்தாங்கி கல்வி மாவட்ட அதிகாரி திராவிடச் செல்வம் மாணவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News