செய்திகள்
வழக்கு

தேனி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 2,698 பேர்கள் மீது வழக்கு

Published On 2020-04-03 17:12 GMT   |   Update On 2020-04-03 17:12 GMT
தேனி மாவட்டத்தில் கடந்த 9 நாட்களில் 144 தடை உத்தரவை மீறிய 2,698 பேர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தேனி:

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு, 144 தடை உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் கடந்த 25.3.2020-முதல் வருகின்ற 14.4.2020-வரை 21 நாட்கள் அறிவித்துள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் மட்டும் வெளியில் சென்று வந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இந்த தடை உத்தரவினை மீறியதாக தேனி மாவட்டத்தில் கடந்த 25.3.2020- முதல் 27.3.2020- வரை போலீஸ் துறையினரால் 203 பேர்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தேவையில்லாத காரணங்களால் வெளியில் சுற்றி திரிந்து கொண்டிருந்த 153 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதுபோல கடந்த 28.3.2020-அன்று 259 பேர் மீது வழக்கு பதிவும், 209 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 29.3.2020- அன்று 68 பேர் மீது வழக்குபதிவு செய்து 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று கடந்த 30.3.2020, 31.3.2020 ஆகிய 2 நாட்களில் 847 பேர் மீது வழக்கு பதிவும், 513 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதுபோல 1.4.2020, 2.4.2020 ஆகிய 2 நாட்களில் 1,321 பேர் மீது வழக்கு பதிவும், 582 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி மாவட்டத்தில் இதுவரை கடந்த 9 நாட்களில் (24.3.2020-முதல் 2.4.2020-வரை) 2,698 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 1,483 மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News