search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "violations"

    • 5 துறைகளும் ஒன்றாக இணைந்து வெடி மருந்து குடோன் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே புதுப்பேட்டை கொக்குபாளையம் மற்றும் நல்லூர் பாளையம், காடாம்புலியூர் பகுதியில் உள்ள மேலிருப்பு பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்து குடோ ன்களில் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை,காவல் துறை, தொழிலாளர் நலத்துறை, தொழிற்சாலை மேம்பாட்டு வாரியம் மேற்கண்ட 5 துறைகளும் ஒன்றாக இணைந்து வெடி மருந்து குடோன் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வில் தொழிற்சாலைகளின் துணை இயக்குநர் மகேஷ்வரன், பண்ருட்டி சிறப்பு திட்ட தனி தாசில்தார் பிரகாஷ்,புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தீயணைப்பு அலுவலர் வேல்முருகன் தொழிலாளர் அலுவலர் ஆகியோர்உடனிருந்தனர்.ஆய்வின்போது விதிமீ றல்கள் ஏதாவது உள்ளதா? எனவும்,பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.

    • இதே காரணத்திற்காக கடந்த வருடம் மஹ்சா அமினி, அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்
    • அதிகாரிகள் தாக்கியதில் அர்மிடாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக நண்பர்கள் தெரிவித்தனர்

    மேற்காசியாவில் உள்ள அரபு நாடான ஈரானில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் தீவிரமாக அமலில் உள்ளது. இச்சட்டத்தை மீறும் பெண்களுக்கு கசையடியும், அபராதமும் தண்டனையாக உள்ளது. அந்நாட்டிற்கு வருகை தரும் அயல்நாட்டு பெண்களும் உடல் வெளியே தெரியும்படியான ஆடைகள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.

    சுமார் 1 வருடத்திற்கு முன் மஹ்சா அமினி (Mahsa Amini) எனும் இள வயது பெண் ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக  அந்நாட்டின் மத கட்டுப்பாட்டு அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது மர்மமான முறையில் இறந்தார். இதனையடுத்து அந்நாட்டில் பெரும் போராட்டம் நடைபெற்றது. உலகளவில் பெண் உரிமை ஆர்வலர்கள் ஈரான் அரசின் பழமைவாத கட்டுப்பாடுகளை கடுமையாக விமர்சித்தனர்.

    இந்நிலையில் ஈரானின் கெர்மன்ஷா (Kermanshah) பகுதியை சேர்ந்த 16 வயதான அர்மிடா கராவந்த் (Armita Garawand) எனும் சிறுமி, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஷோஹடா (Shohada) மெட்ரோ ரெயில் நிலைய சுரங்க நடைபாதையில் (subway) தனது நண்பர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவரது உடையை கண்டு, அந்நாட்டின் மத கட்டுப்பாட்டு அமலாக்க பெண் அதிகாரிகள் அர்மிடா ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம் சாட்டி அவரை தடுத்து நிறுத்தினார். அதற்கு பிறகு அவர்களால் அர்மிடா விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் அச்சிறுமி மயக்கமடைந்து 'கோமா' நிலைக்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அச்சிறுமி டெஹ்ரானின் ஃபாஹர் (Fajr) மருத்துவமனையில் கடும் பாதுகாப்புக்கிடையே சிகிச்சை பெற்று வருகிறாள்.

    அச்சிறுமி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கோமா நிலைக்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் அச்சிறுமியின் நண்பர்கள் இதனை மறுத்தனர். மத கட்டுப்பாட்டு அதிகாரிகளால் அச்சிறுமி கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதனால் மயங்கியதாகவும் குற்றம்சாட்டினர்.

    இதையடுத்து, கடந்த ஆண்டை போல் போராட்டம் வெடிப்பதை தடுக்க ஈரான் காவல்துறை தயார் நிலையில் உள்ளது.

    சர்வதேச எல்லையில் இந்திய படைகள் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் தனது கண்டனத்தை பதிவு செய்தது. #Pakistan #Summon #India
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு இந்திய வீரர்களும் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று முன்தினம் அங்கு இந்திய படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தானின் பிம்பர் பகுதியை சேர்ந்த முனாசா பிபி (வயது 22) என்ற இளம்பெண் உயிரிழந்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

    இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணை தூதர் ஜே.பி.சிங்குக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல், அவரிடம் நேரிலும் கண்டனத்தை பதிவு செய்தார்.

    பாகிஸ்தான் எல்லையில் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் இந்திய வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகவும், இது சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானது எனவும் பைசல் கூறினார். இந்தியாவின் அத்துமீறிய தாக்குதல்கள் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாகவும் அவர் தெரிவித்தார். #Pakistan #Summon #India 
    ×