பண்ருட்டி வெடி மருந்து குடோன்களில் அதிகாரிகள் சோதனை

5 துறைகளும் ஒன்றாக இணைந்து வெடி மருந்து குடோன் ஆய்வு மேற்கொண்டனர்.பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.
பண்ருட்டி அருகே கொக்குபாளையத்திலுள்ள வெடிபொருள் குடோனை தொழிற்சாலைகளின் துணை இயக்குநர் மகேஷ்வரன் ஆய்வு செய்தார்.
பண்ருட்டி அருகே கொக்குபாளையத்திலுள்ள வெடிபொருள் குடோனை தொழிற்சாலைகளின் துணை இயக்குநர் மகேஷ்வரன் ஆய்வு செய்தார்.
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே புதுப்பேட்டை கொக்குபாளையம் மற்றும் நல்லூர் பாளையம், காடாம்புலியூர் பகுதியில் உள்ள மேலிருப்பு பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்து குடோ ன்களில் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை,காவல் துறை, தொழிலாளர் நலத்துறை, தொழிற்சாலை மேம்பாட்டு வாரியம் மேற்கண்ட 5 துறைகளும் ஒன்றாக இணைந்து வெடி மருந்து குடோன் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் தொழிற்சாலைகளின் துணை இயக்குநர் மகேஷ்வரன், பண்ருட்டி சிறப்பு திட்ட தனி தாசில்தார் பிரகாஷ்,புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தீயணைப்பு அலுவலர் வேல்முருகன் தொழிலாளர் அலுவலர் ஆகியோர்உடனிருந்தனர்.ஆய்வின்போது விதிமீ றல்கள் ஏதாவது உள்ளதா? எனவும்,பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com