செய்திகள்
தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்தவர்களை போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்து திருப்பி அனுப்பிய காட்சி.

தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்தவர்களை எச்சரித்த போலீஸ் சூப்பிரண்டு

Published On 2020-04-03 15:12 GMT   |   Update On 2020-04-03 15:12 GMT
கள்ளக்குறிச்சியில் தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்தவர்களை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் எச்சரித்து திருப்பி அனுப்பினார்.
கள்ளக்குறிச்சி:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிகின்றனர். அவர்களை பிடித்து போலீசார் பலமுறை எச்சரித்தும், பொதுமக்கள் தடை உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து பொதுஇடங்களில் சுற்றித்திரிகின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், நேற்று காலை கள்ளக்குறிச்சியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது அத்தியாவசிய தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து விசாரித்தார். பின்னர் அவர் அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் மருந்துகள் வாங்க செல்வதாக கூறிக்கொண்டு ஊர் சுற்றக்கூடாது என எச்சரித்து, வாகன ஓட்டிகளை, அவர்கள் வந்த வழியாகவே திருப்பி அனுப்பினார்.

பின்னர் அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி கூறி, வீட்டிலேயே தனித்து இருக்குமாறு அறிவுரை கூறினார். மேலும் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க நின்ற பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார். 
Tags:    

Similar News