செய்திகள்
கோப்புபடம்

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவும் அபாய பகுதி - அரசு அறிவிப்பு

Published On 2020-04-03 02:37 GMT   |   Update On 2020-04-03 02:37 GMT
தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் பகுதி என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பிரிவு 62-ன் கீழ் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்றுநோயாக கொரோனா வைரஸ் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிவு 76-ன் படி தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை உடனடியாக 24 மணி நேரத்திற்குள் பொது சுகாதாரத்துறைக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு தெரிவிக்க தவறும் பட்சத்தில் அங்கீகாரம் / அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இந்த பொது அறிவிப்பானது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் கொள்ளை நோய் சட்டம் 1897-ன் கீழ் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவுரைகளை கடைப்பிடிக்க தவறுபவர்கள் மீது இந்த சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 188-ன் கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனைக்குள்ளாவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News