செய்திகள்
திருவண்ணாமலை தீப மலையில் பற்றி எரியும் தீ

திருவண்ணாமலை தீப மலையில் மீண்டும் தீ விபத்து

Published On 2020-04-01 13:45 GMT   |   Update On 2020-04-01 13:45 GMT
திருவண்ணாமலை தீப மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வனத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருப்பதாக ஐதீகம். இங்குள்ள தீப மலை உச்சியில் கார்த்திகை மாதம் திருகார்த்திகை தினத்தன்று மகாதீபம் ஏற்றப்படும். இதனை காண தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் குவிவார்கள். சிறப்புமிக்க இந்த தீப மலையில் அரிய மூலிகைச் செடிகள் மற்றும் விலங்குகள் உள்ளன. அந்த மலையில் கடந்த மாதம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனை வனத்துறையினர் போராடி அணைத்தனர். இதில் பெரும்சேதம் ஏற்பட்ட நிலையில் நேற்று மாலை திடீரென தீ மலை நடுப்பகுதியில் தீ பற்றி எரிந்தது. 

இந்த தீ மளமளவென்று பரவி சுமார் பல மீட்டர் தூரம் வரை எரிந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பல மணி நேரம் போராடி நள்ளிரவு நேரம் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல ஏக்கரில் இருந்த மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து சேதமாகி விட்டன. 

இதுபோன்ற தீ விபத்துக்கு சமூகவிரோதிகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அவர்கள் யார் ? என கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News