செய்திகள்
வழக்குப்பதிவு

ஊரடங்கு உத்தரவில் அலட்சியம்: திருச்சியில் ஒரே நாளில் 350 பேர் மீது வழக்கு

Published On 2020-03-31 14:10 GMT   |   Update On 2020-03-31 14:10 GMT
தமிழகத்தில் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் ஆறாம் நாளான இன்று திருச்சி மாநகர் பகுதிகளில் தேவையின்றி சுற்றித்திரிந்த 350 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி

கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு உத்தரவுகள் தமிழகத்தில் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை வலியுறுத்தி மக்கள் கூடுவதை தவிர்க்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் ஆறாம் நாளான இன்று திருச்சி மாநகர் பகுதிகளில் தேவையின்றி சுற்றித்திரிந்த 350 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 97 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். 

இந்த வாகனங்கள் அனைத்தும் கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு வாகன ஓட்டிகளிடம் ஒப்படைக்கப்பட  உள்ளது. இதனிடையே திருமணம், இறப்பு உள்ளிட்ட அவசியமான தேவைகளுக்கு செல்ல விரும்புவார்கள் அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் திருச்சி மாநகர் பகுதிகளான  ஸ்ரீரங்கம் பாலக்கரை,  தில்லைநகர், சத்திரம் பேருந்து நிலையம், கிராப்பட்டி, புதூர், பொன் மலைப்பட்டி  உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலை கள் மற்றும் மேம்பாலங்கள் அடைக்கப்பட்டும், பறக்கும் டிரோன்  கேமராக்கள் கொண்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து  தடையை மீறுபவர்கள் மீது 144 தடை மீறுபவர்கள் என வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் தேவையின்றி திருச்சி மாநகருக்குள் சுற்ற வேண்டாம் என திருச்சி மாநகர காவல்துறை  ஆணையர் வரதராஜூலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News