செய்திகள்
தஞ்சை பெரியகோவிலில் மகாயாகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

கொரோனா வைரஸ்சில் இருந்து மக்களை காக்க தஞ்சை பெரியகோவிலில் சிறப்பு மகாயாகம்

Published On 2020-03-31 13:38 GMT   |   Update On 2020-03-31 13:38 GMT
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து மக்களை காக்க தஞ்சை பெரியகோவிலில் சிறப்பு மகாயாகம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்:

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ்சால் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரழந்து வருகின்றனர். இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோவில்கள், சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் கோவில்களில் பக்தர்கள் இன்றி பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனா வைரஸ் அழிந்து உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டி தஞ்சை பெரியகோவிலில் நேற்று மிருத்யுஞ்சய மகா யாகம் நடைபெற்றது. மேலும் பெருவுடையார், பெரியநாயகிக்கு சந்தன், திரவியப்பொடி, பால், தயிர், இழநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து சாம்பார் சாதம், மிளகு ரசம் படைக்கப்பட்டது. கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமி மற்றும் அம்பாள் சன்னதியில் குண்டங்கள் அமைக்கப்பட்டு மகா யாகம் நடைபெற்றது. இதையடுத்து மகா தீபாராதணை செய்யப்பட்டது.

Tags:    

Similar News