செய்திகள்
தஞ்சை திலகர் திடல் அருகே மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு காய்கறிகடையில் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள்

தஞ்சையில் நகரில் 20 இடங்களில் காய்கறி கடைகள்- மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடு

Published On 2020-03-31 11:01 GMT   |   Update On 2020-03-31 11:01 GMT
தஞ்சை காமராஜ் மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் செய்யும் கடைகளை பிரித்து மாநகரில் 20 இடங்களில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்:

தஞ்சை காமராஜ் மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் செய்யும் கடைகளை பிரித்து மாநகரில் 20 இடங்களில் இன்று முதல் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார். தஞ்சை காமராஜ் மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் செய்யும் காய்கறி கடைகளை மாநகரில் 20 இடங்களில் வைத்து இன்று (31-ம் தேதி) முதல் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி தஞ்சை பள்ளியக்ரஹாரம் மாநகராட்சி பள்ளி, கரந்தை மாநகராட்சி உயர் நிலைப்பள்ளி, தற்காலிக பஸ் ஸ்டாண்ட், கீழ வாசல் தூய பேதுரு உயர்நிலைப் பள்ளி, பீரங்கிமேடு எதிரே உள்ள காலியிடம், அரண்மனை விளையாட்டு மைதானம், கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி மைதானம், திலகர் திடல், காவேரி சிறப்பங்காடி அருகில் காய்கறி சந்தை, தென்கீழ் அலங்கம் மேல் நிலைப்பள்ளி, எஸ்.என்.எம். நகர் மாநகராட்சி மைனதாம், ஆட்டுக்கார தெரு, விபி கோயில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சேவியர் நகர் மாநகராட்சி மைதானம், கல்லுக்குளம் செயிண்ட் ஜோசப் பள்ளி, கூட்டுறவு காலனி மைதானம், முனிசிபல் காலனி நகராட்சி மைதானம், பரிசுத்தம் நகர் கிட்டு மைதானம், புதிய வீட்டு வசதி வாரியம் பிள்ளையார்கோவில், சித்ரா நகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி, புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகிய 20 இடங்களில் காய்கறி வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இத்தகவலை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News