செய்திகள்
கைது

தூத்துக்குடியில் ரூ. 2 லட்சம் போலி கிருமிநாசினி தயாரித்த 2 பேர் கைது

Published On 2020-03-21 09:00 GMT   |   Update On 2020-03-21 09:15 GMT
தூத்துக்குடியில் ரூ. 2 லட்சம் போலி கிருமிநாசினி தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இதனை பயன்படுத்தி தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எந்தவித உரிமமும் பெறாமல் கிருமி நாசினி தயாரிக்கப்படுவதாக தூத்துக்குடி வருவாய்த் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது முத்தம்மாள் காலனி 5-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலி கிருமி நாசினி தயாரித்து வைத்திருந்ததும், அதை தயாரிக்க தேவையாக பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ .2 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக வருவாய்த்துறையினர் தூத்துக்குடி அருகே உள்ள கீழமுடிமன் பகுதியை சேர்ந்த ஜான் கிஷோன், ஜான் பெனடிக் ஆகிய 2 பேரை பிடித்து தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News