செய்திகள்
கொரோனா வைரஸ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை

Published On 2020-03-14 07:53 GMT   |   Update On 2020-03-14 07:53 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை என்று கலெக்டர் வீரராகவராவ் கூறியுள்ளார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய் வைரஸ் கண்டறியும் மருத்துவப் பிரிவுகள் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய் பாதிப்பு யாருக்கும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே நோய் பாதிப்பு குறித்து மக்கள் அச்சம் அடைய வேண்டாம். வெளிநாடுகளிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இது தவிர வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்கள் வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News