செய்திகள்
மருதமலை முருகன் கோவில்

மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது

Published On 2020-03-13 09:19 GMT   |   Update On 2020-03-13 09:19 GMT
கொரோனா பீதியால் மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளது.
கோவை:

கொரோனா வைரஸ் காரணமாக சபரிமலை, திருப்பதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் வரவேண்டாம் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து கோவில் மற்றும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

பக்தர்களால் 7-ம் படைவீடு என்று அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் வெள்ளிக்கிழமையான இன்று கூட்டம் குறைவாக இருந்தது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவிலில் காலை, மாலை சிறப்பு பூஜை செய்யப்படும். பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்வார்கள். கொரோனா பீதியால் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.

கோவிலில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டது. சிறப்பு தரிசனம் மற்றும் பொது தரிசனம் செய்யும் பக்தர்கள் நடுவில் உள்ள கம்பிகளை பிடித்தவாறு செல்வார்கள். அந்த கம்பிகளை கிருமி நாசினியால் அடிக்கடி தூய்மைப்படுத்த முடிவு செய்து உள்ளனர். இதேபோன்று மாநகரின் பல்வேறு கோவில்களில் இன்று கூட்டம் குறைவாகவே இருந்தது.

Tags:    

Similar News