செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

தமிழக பா.ஜ.க. தலைவராக நியமனம் செய்யப்பட்ட எல்.முருகனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

Published On 2020-03-11 16:59 GMT   |   Update On 2020-03-11 16:59 GMT
தமிழக பா.ஜ.க. தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள எல். முருகனுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை:

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அந்த பதவி கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் காலியாக இருந்தது.

இதற்கிடையே, தமிழக பா.ஜ.க. புதிய தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பினை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று வெளியிட்டார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், பா.ஜ.க. தலைமை வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன் என தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ள எல்.முருகனுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News