செய்திகள்
தீ விபத்து

காங்கயத்தில் அரசு பள்ளியில் தீ விபத்து: புத்தகங்கள், எழுது பொருட்கள் எரிந்து சாம்பலானது

Published On 2020-02-23 16:15 GMT   |   Update On 2020-02-23 16:15 GMT
காங்கயத்தில் அரசு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் புத்தகங்கள், எழுது பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் காங்கயம்- தாராபுரம் ரோட்டில் போலீஸ் நிலையம் எதிரே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காங்கயம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக புத்த கங்கள், எழுது பொருட்கள், புத்தகப் பைகள், காலணிகள் வைக்கப்பட்டிருந்தன.

தற்போது புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு மீதமுள்ள பொருட்கள் அனைத்தும் இந்த பள்ளியில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அந்த அறையில் இருந்து கரும்புகை வெளி வந்தது. சிறிது நேரத்தில் அறையில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. அறைமு ழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து காங்கயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த எழுது பொருட்கள், புத்தகங்கள், காலணிகள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தீ விபத்து பற்றி அறிந்ததும் உதவி தொடக்க கல்வி அலுவலர் சுசீலா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், வட்டார கல்வி அலுவலகம் சார்பில் காங்கயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கு வழங்கியது போக மீதமுள்ள புத்தகங்கள், எழுது பொருட்களை இந்த அறையில் வைத்திருந்தோம். அந்த பொருட்கள் தான் தீ விபத்தில் எரிந்து சாம்பலாகி உள்ளது என்றார்.

இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News