செய்திகள்
அமைச்சர் சி.வி.சண்முகம்

7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார்- சி.வி.சண்முகம் பேட்டி

Published On 2020-02-23 12:11 GMT   |   Update On 2020-02-23 12:11 GMT
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

விழுப்புரம்:

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டிய ளித்தார்.

அப்போது அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கில் மத்திய அரசு வக்கீல், சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய வரம்பை மீறி பேசி இருப்பதாகவும், தன் தகுதிக்கு குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். இந்த கருத்தை அவர் தெரிந்தே சொன்னாரா? என்று தெரியவில்லை. இது கண்டனத்துக்கு உரியது.

குற்றம் சாட்டப்பட்டவரின் கருணை மனு, கவர்னரிடம் இருக்கும்போது அதுதொடர்பாக கவர்னர் உத்தரவு பிறப்பிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தமிழகத்தின் முடிவை கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது.


இதில் கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசை கேட்க வேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்க முழு உரிமை கவர்னருக்கு உள்ளது. இதில் கவர்னர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும். இநத கால கெடுவிற்குள் முடிவெடுக்க வேண்டும் என எந்த காலத்திலும் கிடையாது. ஆகையால் கவர்னர் நல்ல முடிவாக எடுப்பார் என தமிழக அரசு நம்புகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News