செய்திகள்
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி.

ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு: முதல்-அமைச்சர் நாராயணசாமி

Published On 2020-02-22 04:24 GMT   |   Update On 2020-02-22 04:24 GMT
புதுவையில் இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்கப்படும் என்ற கவர்னரின் உத்தரவு செல்லும் என ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதில் ரொக்க பணம் வழங்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.

இது தொடர்பாக புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னரின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில நான் வழக்கு தொடுத்தேன். இதில், நமக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை. இது எனக்கு கருப்பு நாள்.


அரிசிக்கு பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இலவச அரிசி வழங்கும் திட்டத்தை நிறைவேற்றுவது அரசின் கொள்கை. அதில் இருந்து பின்வாங்க மாட்டோம். உறுதியாக உள்ளோம்.

எனவே, அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று அமைச்சரவை கூட்டத்தை கூட்டி முடிவு செய்யப்படும். தேவைப்பட்டால் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News