செய்திகள்
காங்கிரஸ்

களக்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஒப்பாரிவைத்து ஆர்ப்பாட்டம்

Published On 2020-02-19 12:16 GMT   |   Update On 2020-02-19 12:16 GMT
கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து களக்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஒப்பாரிவைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

களக்காடு, பிப். 19-

களக்காட்டில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், விலை உயர்வை வாபஸ் பெற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ரூபி மனோகரன் தலைமை வகித்தார். களக்காடு நகர தலைவர் ஜார்ஜ் வில்சன் முன்னிலை வகித்தார்.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் மோகன் குமாரராஜா, தமிழ் செல்வன், வட்டார தலைவர்கள் துரை, ரவீந்திரன், துரை ராஜ், கணேசன் நகர தலைவர்கள் சுடலைக்கண்ணு, பைசல் வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் சந்திரசேகர், ராஜகோபால் மகளிரணி மாவட்ட தலைவி தனிதங்கம் மகளிரணி கமலா, ராணி மற்றும் நாங்குநேரி, களக்காடு, திருக்குறுங்குடி, மாவடி, ஏர்வாடி, மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை வாபஸ் பெற கோரியும், மத்தியஅரசை எதிர்த்தும் முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது பெண்கள் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, அதனை சுற்றி வந்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News