search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress party demonstration"

    அனைவருக்கும் பயிர் இழப்பீட்டு தொகை வழங்க கோரி அறந்தாங்கியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    அறந்தாங்கி:

    அனைவருக்கும் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்க கோரி அறந்தாங்கி தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அறந்தாங்கி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் டாக்டர் செல்வேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அர்ச்சுணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் தர்ம தங்கவேல் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அறந்தாங்கி தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அரவிந்தன், அறந்தாங்கி ஒன்றிய பொதுச் செயலாளர் கார்த்திக், அறந்தாங்கி நகரத்  தலைவர் வீராச்சாமி, வட்டாரத்  தலைவர்கள் நிலையூர் சரவணன், கூடலூர் முத்து, விஸ்வநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ்காந்தி, மாவட்டச் செயலாளர் பெரியசாமி, நிர்வாகிகள் குணசேகரன், முத்து சிவகிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை கல்வி கடனுக்காக வரவு வைப்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    தக்கலையில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தக்கலை:

    தக்கலையை அடுத்த மணலி சந்திப்பில் இருந்து கொல்லன் விளை வரை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற உள்ளது.

    தக்கலையில் மேம்பாலம் கட்டினால் இந்த பகுதியில் உள்ள வர்த்தகர்கள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    எனவே மேம்பாலம் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வர்த்தகர் சங்கம், வணிகர் சங்கம், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    இந்த நிலையில் இன்று தக்கலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மேம்பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் ஹனுக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முளகுமூடு வட்டார முன்னாள் குருகுல முதல்வர் ஜார்ஜ் பொன்னையா கலந்து கொண்டார்.

    மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் தம்பி விஜய குமார், மாவட்ட வக்கீல் அணி தலைவர் ஏசுராஜா, தக்கலை வட்டார தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், மாவட்ட செயலாளர் ஜாண் இக்னேசியஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜேஷ் குமார், வின்சென்ட் ராஜ், புரோடிமில்லர் உள்பட திரளான காங்கிரசார் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    மத்திய பா.ஜ.க. அரசு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து 3-ம் ஆண்டு தொடக்கத்தை கருப்பு தினம் என்று அறிவித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாநில செய்தி தொடர்பாளர் பெனட் அந்தோணிராஜ், நகர தலைவர் இப்ராகிம்பாபு உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அவர்கள், பண மதிப்பிழப்பு குறித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் அறந்தாங்கியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் தர்மதங்கவேல் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புஷ்பராஜ், சுப்புராம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ×